மாறுபடும் இந்த உலகில் வேலை என்பது அனைவருக்கும் பொதுவான விஷயமாக இருக்கிறது. அதை எப்படி செய்கிறோம் என்பதில்தான் வேறுபாடு. உலகம் முழுவதும் இப்பொழுது கொரோனாவிற்கு பின் பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா என்று யோசித்த காலம் போய் வீட்டில் இருந்து நீங்கள் வேலை செய்யலாம் என்று பல வெளிநாட்டு கம்பெனிகள் வேலையை வழங்குகிறது. நீங்கள் freelancer ஆக விரும்புபவர்களாக இருந்தால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
உங்களுக்கு இது சரிப்பட்டு வருமா?
ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் வாழ்க்கை சூழலும் வேறு. சிலருக்கு வீட்டை விட்டு வெளியேறி வேலை செய்தால் மட்டுமே அது திருப்தி தரும். ஆனால் சிலருக்கு வேலையை எப்படி வேண்டுமானாலும் செய்தால் போதும் அவர்களுக்கு தேவை அதற்கான ஊதியம். அப்படி நினைப்பவர்களுக்கு freelancing ஒரு வரப்பிரசாதம். முதலில் நீங்கள் எதில் ஃப்ரீ லான்சிங் செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வேலையை நீங்கள் ஒழுக்கமாக மற்றும் தரமாக செய்து கொடுப்பதற்கு உங்களுக்கு மேல் யாரும் இல்லை. எனவே நீங்கள் தான் உங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு சரியான நேரத்தை ஒதுக்கி நீங்கள் செய்ய வேண்டும். விடுமுறை என்பது உங்களுக்கு இருக்காது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வேலை செய்யலாம். என்று ஒரு வொர்க் ஷெட்யூல் இருந்து கொண்டே இருக்கும்
Platform ஐ தேர்ந்தெடுங்கள்:
Freelancing செய்வதற்கு என்று தனி websites இருக்கிறது. அதில் நீங்கள் உங்களுக்கு தெரிந்த திறமைகளை பதிவேற்றினால் அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் வரும். உங்கள் தினமும் அதை தேடிக் கொண்டே இருந்தால்தான் அது உங்களுக்கு சரிப்பட்டு வருமா என்று நீங்கள் யோசிக்க முடியும். மேலும் LinkedIn போன்ற தளங்களில் உங்களின் bio, update ஆக இருப்பது அவசியம். உங்கள் துறையில் இருப்பவர்கள் எத்தகைய திறமையை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நீங்களும் அதற்கேற்ப உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு ஊதியம் வேண்டும் என்பதை நீங்கள் அதில் பதிவேற்றிக் கொள்ளலாம்.
Be brave:
நீங்கள் எந்த வேலை செய்தாலும் தைரியமாக செய்ய வேண்டும். மேலும் உங்களின் கணக்கை அவ்வப்போது மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உங்களின் வேலை என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து சில விஷயங்களை நீங்கள் உங்களுக்கு ஏற்ப மாற்றி வேலை வாய்ப்புகளை இழுத்துக் கொள்ள வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருந்தால் எந்த வேலையும் சாத்தியம் தான்.
Some websites:
நான் கீழே கூற இருக்கும் இந்த வலைத்தளங்கள் அனைத்திலும் நீங்கள் பிரீலான்சிங் செய்யலாம். ஒரு கணக்கை தொடங்கி உங்களுக்கு ஏற்ற வேலைகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மேலும் அதன் மூலம் நீங்கள் அமெரிக்கன் டாலரில் பணத்தை சம்பாதிக்கலாம்.
-
Upwork
-
Fiverr
-
Gurumedia
-
Freelancer
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/benefits-of-drinking-hot-water-1677785
https://tamil.shethepeople.tv/health/love-spicy-food-know-the-after-effects-1675208
https://tamil.shethepeople.tv/society/how-should-a-girl-behave-in-a-relationship-1565288
https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-part-2-1518390