Advertisment

பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களுடன் இருக்கக் கூடாது?

author-image
Devayani
17 Jan 2023
பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களுடன் இருக்கக் கூடாது?

இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணாதிக்க விதிமுறைகள் எப்பொழுதும் ஆண்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அது பெண் அடிமைத்தனத்தையும் அதிகரிக்கிறது. ஒரு பெண் பிறந்ததிலிருந்து பல தடைகளை எதிர்கொள்கிறாள் அந்த தடைகள் திருமணத்திற்கு பிறகு அதிகரிக்கிறது.

Advertisment

திருமணத்திற்கு பிறகு ஆண்களை விட பெண்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. அது வரதட்சணையில் இருந்து தொடங்கி காலம் முழுக்க ஒரு அடிமையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தருகிறது.

அதில் ஒன்றுதான் திருமணத்திற்கு பிறகு பெண்கள் அவர்களின் பெற்றோர்களை விட்டு கணவன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பது. ஒருவேளை கணவன் அவரின் மனைவியோடு அவள் வீட்டிற்கு செல்வது அல்லது வீட்டு மாப்பிள்ளை ஆக இருக்க முடிவெடுத்தாலும் இந்த சமூகம் அவர்களை அதற்கு அனுமதிப்பதில்லை.

ஏன் ஒரு பெண் கட்டாயமாக திருமணத்திற்கு பிறகு அவளின் பெற்றோர்களை விட்டு கணவனுடன் பெற்றோர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்? பெண்கள் திருமணத்திற்கு பிறகு அவர்கள் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள உரிமை இல்லையா? ஆண்களுக்கு அவர்களின் பெற்றோர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பெண்களுக்கும் அவர்கள் பெற்றோர் முக்கியமானவர்கள். ஆண்களின் பெற்றோர்களுக்கு எப்படி வயதாகிறதோ, அவர்களுக்கு எப்படி ஒரு துணை தேவைப்படுகிறதோ, அதே போல் தான் பெண்களின் பெற்றோர்களுக்கும் துணை தேவைப்படுகிறது. 

matrimony

Advertisment

பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவரின் பெற்றோர்களின் வீட்டிற்கு செய்வதை இயல்பாக பார்க்கும் இந்த சமூகம், அதையே ஒரு ஆண் செய்தால் ஏன் அவர்களை இழிவாக பேசுகிறது. ஏன் இந்த ஆணாதிக்கம் ஆண்களின் மதிப்பை நஞ்சு தன்மை வாய்ந்த விதிகளின் மூலம் நிர்ணயிக்கிறது?

ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவெடுக்க வேண்டும். ஒரு பெண்ணையும், ஆணையும் இதுதான் செய்ய வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த கூடாது. ஆண் அவர்களின் பெற்றோர்களுடன் இருப்பது எப்படி அவர்களின் உரிமையோ, அதே போல் ஒரு பெண் அவளுடைய பெற்றோர்களுடன் வாழ நினைப்பதும் அவள் உரிமையே. ஒருவரை இதுதான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவது தவறு.

முன்பு ஆண்கள் தான் சம்பாதித்தார்கள், அதனால் பெண்கள் தங்களின் கணவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றனர், அவரின் பெற்றோர்களின் குடும்பத்தோடு வாழ்ந்தனர். தற்போது பெண்களும் சம்பாதிக்க தொடங்கி விட்டனர். எனவே, இருவரின் கருத்துக்களையும் மதித்து அதற்கேற்றது போல முடிவு எடுக்க வேண்டும்.

Advertisment

wam

ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்த விதிமுறையும் இருக்கக் கூடாது. அவள் வேலைக்கு செல்ல வேண்டுமென்றாலும் அல்லது வேலையை விட வேண்டும் என்றாலும் அதை அவள் முடிவாக இருக்க வேண்டும். அவர் விருப்பத்தை விட்டு ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நஞ்சுத்தன்மை வாய்ந்த சமூக விதிகளை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திணிக்க கூடாது. 

இதுபோன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக விதிகளை கேள்வி கேட்கும் பெண்களுக்கு "படித்த திமிரு", "வேலைக்கு போற திமிரு" என்று பட்டம் சூட்டுகின்றனர். இது திமிரு அல்ல இத்தனை நாட்களாக அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமையை அவர்கள் கேட்க தொடங்கிவிட்டனர் என்று அர்த்தம். ஒருவரின் உரிமையை பெறுவது திமிர் என்றால் அது திமிராக இருக்கட்டும்.

Advertisment

தற்போது மாறி வரும் காலங்களில் பெண்கள் எப்படி அவர்களுக்கு எதிராக நடக்கும் சமூக விதிகளை உடைக்க தொடங்கி விட்டார்களோ, அதை போல் ஆண்களும் அவர்களுக்கு எதிரான சமூக விதிகளை உடைக்க வேண்டும். ஆண்கள் அழக்கூடாது, ஆண்கள் பயப்படக்கூடாது, ஆண்கள் பெண்களை அடிமையாக தான் நடத்த வேண்டும் இது போன்ற ஆணாதிக்க சமூக விதிகளை ஆண்கள் எதிர்த்து பேச வேண்டும். 

ஒரு திருமண வாழ்க்கையில் இருவருமே அவர்களை சமமாக கருதி வாழ வேண்டுமே தவிர ஒருவரை தாழ்மையாக நினைத்து, மற்றொருவரை உயர்வாக நினைத்து வாழக்கூடாது. அப்படி வாழும் வாழ்க்கையில் எப்பொழுதும் முழுமையான சந்தோஷம் கிடைக்காது. எனவே, பெண்கள் அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து பேசுவது, அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பது அவசியமாகிறது.

Suggested Reading: பணரீதியான சுதந்திரம்(financial independence) தரும் நன்மைகள்

Suggested Reading: உருவ கேலி (body shaming) மனிதர்களை மனதளவில் பாதிக்கிறது 

Suggested Reading: தமிழ் நாடகங்களில் பெண்களின் சித்தரிப்பு

Advertisment
Advertisment