அதிகமாக சிந்திக்கும் பழக்கத்துடன் பலர் போராடிக் கொண்டு இருக்கின்றனர். அது மன ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதிகமாக சிந்திக்கும் பொழுது ஒரு சூழ்நிலையின் எதிர்மறையான அம்சங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதால் அது கவலை, மன அழுத்தம் மற்றும் மனசோர்வு போன்ற விஷயங்களுக்கு வழி வகுக்கிறது. அதிகமாக சிந்திப்பது மன ஆரோக்கியத்தில் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டு அதை நிறுத்துவதற்கான உத்திகளை கற்றுக் கொள்வது அவசியமாக இருக்கிறது.
முன்பு கூறியது போலவே நீங்கள் அதிகமாக சிந்திக்கும்போது ஒரு சூழ்நிலையின் எதிர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துவதால் நேர்மறையான விஷயங்களை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். இதுபோன்று நேர்மறையான விஷயங்களை புறக்கணிக்கும் பொழுது நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியின் உணர்வுகள் அதிகரிக்கிறது.
அதிகப்படியாக சிந்திப்பது மன ஆரோக்கியத்தை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. இதனால் டென்ஷன், தலைவலி, பதட்டம் மற்றும் தூக்கமின்மை உண்டாகிறது. நீங்கள் தொடர்ந்து கவலைப்படும்போது அல்லது சிந்திக்கும் பொழுது உங்கள் மனமும், உடம்பும் ஓய்வெடுக்க தவறும். இதனால் உங்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்காமல் சோர்வு அதிகரிக்கும்.
அதிகமாக சிந்திப்பதன் அறிகுறிகள்:
நீங்கள் அதிகமாக சிந்திப்பதை கண்டுபிடிப்பதற்கு சவாலாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் இருக்கிறது. கீழ் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களில் உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டு இருந்தால் நீங்கள் அதிகமாக சிந்திக்கிறீர்கள்.
- அலைமோதும் எண்ணங்கள்: உங்கள் மனம் தொடர்ந்து ஏதாவது யோசித்துக் கொண்டே இருக்கும். அதை உங்களால் கட்டுப்படுத்த அல்லது மெதுவாக்க முடியாது.
- உரையாடல்களை யோசித்துப் பார்ப்பது: உங்கள் மூளையில் உரையாடல்களை யோசித்துப் பார்ப்பது. மேலும், ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் மீண்டும் இயக்குகிறது.
- அதிக கவலை: நீங்கள் எல்லாவற்றைப் பற்றியும் கவலைப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை நினைத்துக் கூட கவலைப்படுகிறீர்கள்.
- முடிவு எடுப்பதில் சிரமம்: எப்பொழுதும் எதிர்மறையான விளைவுகளில் நீங்கள் கவனம் செலுத்துவதால் முடிவுகள் எடுப்பதில் உங்களுக்கு சிரமம் உள்ளது.
- உங்களால் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள்: உங்கள் உணர்சிகளையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த முடியாத நிலை.
அதிகமாக சிந்திப்பதை எப்படி கட்டுப்படுத்துவது:
அதிகமாக சிந்திப்பதை கடந்து வருவது சவாலாகவே இருக்கிறது. இருப்பினும் சில உக்திகளை பயன்படுத்தி அதை நிறுத்த முடியும் மற்றும் உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
1. நினைவாற்றலை பயிற்சி செய்யுங்கள்:
நினைவாற்றலின் பயிற்சி என்பது தற்போதைய தருணத்தில் இருப்பது மற்றும் உங்கள் எண்ணங்களை ஆராய்ந்து உள்ளடக்க செய்வது. இது உங்கள் எண்ணங்களை மற்றும் உணர்ச்சிகளை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது
2. உங்கள் எண்ணங்களுக்கு சவால் விடுங்கள்:
எதிர்மறையான எண்ணங்கள் அல்லது அதிகப்படியான சிந்தனை முறைகளை நீங்கள் கவனிக்கும் பொழுது அதற்கு சவால் விடுங்கள். அவை உண்மையா அல்லது கற்பனையா என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். பெரும்பாலும் நமது எண்ணங்கள் கற்பனையை அடிப்படையாக கொண்டவை, உண்மைகள் அல்ல. அவற்றை சவால் செய்வது விஷயங்களை இன்னும் தெளிவாக பார்க்க உதவும்.
3. உங்களை திசை திருப்பங்கள்:
நீங்கள் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கும் பொழுது நீங்கள் விரும்பும் ஒரு செயலில் கவனத்தை செலுத்துங்கள். அது நடை பயிற்சி செய்வது, பாடல்கள் கேட்பது, புத்தகம் படிப்பது என எளிமையாக கூட இருக்கலாம். உங்களை திசை திருப்புவது உங்கள் கவனத்தை மாற்றவும் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவும்.
4. சுய கவனிப்பு:
உங்கள் மனம் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள சுய கவனிப்பு அவசியமாகிறது. பொதுவாக அவை தேவையான அளவு தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செய்வது மற்றும் உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்ற செயல்களாகும். உங்களை கவனித்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் போன்றவை குறைந்து உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
5. யாரிடமாவது பேசுங்கள்:
நீங்கள் நம்பும் ஒருவருடன் பேசுவது உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் செயல்படுத்த உதவும். அது உங்கள் நண்பராக இருக்கலாம், குடும்பத்தில் ஒருவராக இருக்கலாம் அல்லது மனநல நிபுணராக கூட இருக்கலாம். யாரிடமாவது பேசுவது உங்கள் எண்ணங்களை புரிந்து கொள்ள உதவுவதோடு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.
ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள்:
அதிகமாக சிந்திப்பது உங்கள் மனநலத்தை பாதிக்கும். ஆனால், இந்த பழக்கத்தை நம்மால் கடந்து வர முடியும். மேற்கூறிய விஷயங்களை பின்பற்றுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிகமாக சிந்திப்பதை அறிந்து அதற்கேற்றவாறு நாம் அதை தடுக்க தேவையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்போழுது தான் நமது வாழ்க்கையும் மேம்படும்.
அதேபோல், அதிகமாக சிந்திப்பதை உடனடியாக நிறுத்த முடியாது. அதற்கு நிறைய நேரமும், முயற்சியும் தேவைப்படுகிறது. இடையில் உங்களுக்கு இந்த முயற்சிகளை விட்டு விடலாம் என்று கூட தோன்றலாம். ஆனால், நீங்கள் அதை விடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மேல் கூறிய விஷயங்களை தொடர்ந்து பின்பற்றுவது மூலம் உங்கள் மன ஆரோக்கியம் மேம்படுவதை நீங்கள் உணரலாம்.
இருப்பினும் உங்களுக்கு அதிகமாக மன அழுத்தம், பதட்டம் போன்ற விஷயங்கள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.
சரியான வழிகாட்டுதலைப் பெற Gytree நிபுணர்களிடம் பேசுங்கள். Gytree என்பது பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தளமாகும். ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு தீர்ப்புகளை வழங்குகிறது.
Suggested Reading: மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
Suggested Reading: மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள ஐந்து எளிமையான வழிகள்
Suggested Reading: உடனே மருத்துவரை சந்திப்பதற்கான பத்து அறிகுறிகள்
Suggested Reading: மாதவிடாய் வலியை (period cramps) போக்கும் 6 சாறுக்கள்