மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாகும். உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தை எந்த விதத்தில் பாதிக்கிறது, அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
women doing exercise

Image is used for representational purpose only

மக்கள் உடல் ஆரோக்கியம் மட்டும்தான் நன்றாக வாழ்வதற்கு முக்கியமான ஒன்று என்று நினைக்கின்றனர். ஆனால், பலர் நமது உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்ட ஒன்று என்பதை புரிந்து கொள்ள தவறுகின்றனர். நமது உடலை நாம் எப்படி பார்த்துக் கொள்கிறோமோ அதன்படி தான் நமது மனமும் செயல்படுகிறது. நாம் உடல் நலத்தில் அக்கறை கொள்ளவில்லை என்றால் அது மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

Advertisment

முன்பு கூறியது போலவே உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு தான் நமது உடல் செயல்படுகிறது. உதாரணத்திற்கு நம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்வுகள் நாம் பயப்படும்போது அல்லது அதிகமான அழுத்தத்தில் இருக்கும் போது தோன்றுவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.

இந்த மாதிரி மட்டும் இல்லாமல் அது வேறு மாதிரியும் வேலை செய்கிறது. இதற்கு ஒரு உதாரணம் chronic inflammation. இந்த வீக்கம் மூலைக்கு சென்று மன சோர்வு, மன அழுத்தம், மனநிலை மாற்றங்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

women in stress

அறிகுறிகள் மற்றும் காரணங்கள்:

சமீப காலம் வரை மனநிலை பிரச்சனைகள் தனிமையான ஒன்றாக பார்க்கப்பட்டது. மனசோர்வு அல்லது பதட்டம் ஏற்பட்டால்  உளவியலாளர் அல்லது ஆலோசகரிடம் சென்று அவர்கள் பரிந்துரைப்பது போல மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. மனம் மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இதுபோன்ற சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால், உடலும் மூளையும் இணைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து கொள்வது மனநலத்தை பாதுகாப்பதற்கு பெரிய அளவில் உதவுகிறது.

Advertisment

எடுத்துக்காட்டான chronic inflammationனை பார்க்கும் பொழுது கீழ் கொடுக்கப்பட்ட காரணங்கள் அதற்கு அடிப்படையாக இருக்கின்றன:

- நமது அன்றாட உணவு பழக்கங்களில் சக்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், refined seed oil ஆகிய canola எண்ணெய், safflower எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பதப்படுத்தப்பட்ட அல்ல junk foods போன்றவற்றை தவிர்க்கவும்.

- ஆட்டோ இம்யூன்(autoimmune) நிலைமைகள்

- நீண்ட நாட்கள் இருக்கும் ஒவ்வாமை (chronic allergies)

- நமது செரிமான மண்டலத்தில் வாழும் நுண்ணுயிரிகளான குடல் நுண்ணுயிரிகளின் ஏற்ற தாழ்வுகள். கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் அதிகரித்து நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறையும் பொழுது அது வீக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

Advertisment

- அதிகப்படியான மன அழுத்தம்.

women doing workout

தீர்வுகள்:

- ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும், அது சிறந்த மன ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். மாறாக மோசமான உணவு மேலே குறிப்பிடப்பட்ட நிலைமைகள் போன்ற பல உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் போன்ற சில உணவுகள் மனசோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளுக்கு பங்களிக்க கூடும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்யும் பொழுது இது போன்ற பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும். அவை மூளை நல்லபடி செயலாற்றவும், மன ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது.

- உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்: ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். அதேபோல் சக்கரை, ரிபைண்ட் கார்போஹைட்ரேட்(refined carbohydrates), ரிபைண்ட் சீட் ஆயில்(refined seed oil) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

- உங்களுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவுகளை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், corn மற்றும் soy போன்ற பொருட்கள் சிலருக்கு ஒற்றுக்கொள்ளாது.

Advertisment

- உங்களின் stress குறைத்து அதை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

- ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வது மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள முடியும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றை தீர்ப்பதற்கு உடல் பயிற்சியை பலர் பரிந்துரைக்கின்றனர்.

- உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டவை. அதனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தை தவிர்த்தால் அது மன ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதுடன் ஒழுங்கான உணவையும், ஒழுங்கான தூக்கத்தையும் பெறுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதனை மீறியும் உங்களுக்கு சில உடல் அல்லது மனரீதியான பிரச்சினைகள் இருந்தால் ஒரு நிபுணரை சந்தித்து அதற்கு ஏற்றவாறு டயட்டையும்(diet), உடற்பயிற்சியையும் கற்றுக் கொள்ளலாம். 

Advertisment

Suggested Reading: தவறான ப்ராக்களை (wrong bra size) அணிவதால் ஏற்படும் விளைவுகள்

Suggested Reading: மாதவிடாயின் (periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

Suggested Reading: மாதவிடாய் வலியை(period cramps) குறைக்க உதவும் 6 சாறுகள்

Suggested Reading: முடி உதிர்வதை தடுக்க சமையலறையில் இருக்கும் ஐந்து பொருட்கள்

Advertisment
physical health health mental health