Advertisment

Vegan diet - ஆபத்தா?

Vegan Diet என்பது இப்பொழுது இந்தியா மற்றும் உலக நாடுகளில் பின்பற்றி வரும் ஒரு உணவு முறையாகும். சைவம் அசைவம் என்பதற்கிடையில் சுட்ட சைவம் என்று இதனை கூறுகின்றனர். இந்த உணவு முறையை பின்பற்றும் பொழுது நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?

author-image
Pava S Mano
New Update
Vegan Diet

Image is used for representational purpose only

உணவு என்பது இப்பொழுது சுவைத்து ரசிப்பதற்கானது என்ற ஒரு கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் தேர்வு செய்யும் உணவின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பல கருத்துக்கள் இருந்து கொண்டு இருக்கிறது. உணவுதான் மூளை தசை ரத்தம் போன்ற உறுப்புகளுக்கு தகுந்த வைட்டமின்ஸ் மற்றும் வெவ்வேறு விதமான சத்துக்களை பிரித்துக் கொடுக்கிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் பருவ நிலைக்கு மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப பலவிதமான உணவு முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. சைவம் அசைவம் இவை மட்டும் தான் நமக்கு தெரிந்தது. ஆனால் சுத்த சைவம் என்றழைக்கப்படும் Vegan foods இப்பொழுது டிரெண்டாக இருந்து வருகிறது. வீகன் டயட், பொதுவாக சாப்பிடப்படும் சைவ உணவு பழக்கத்தோடு விலங்கினால் இருந்து பெறப்படும் நெய், பால், தயிர், பன்னீர், சீஸ், முட்டை, தேன் போன்ற உணவுகளை தவிர்க்கும் ஒரு உணவு முறையாகும்.

Advertisment

Vegan diet இல் என்ன சாப்பிடுவது:

Vegan Diet

நம் உடம்பில் புரத சத்து கிடைப்பதற்காக வீகன் டயட் பின்பற்றுபவர்கள் கட்டாயம் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய பயிறு வகைகள், காளான், கீரை, ப்ரோக்கலி போன்ற உணவுகளை சாப்பிடலாம். எலும்புகள் தசைகள் நரம்புகள் போன்ற உறுப்புகளுக்கு தேவைப்படுவது புரதச்சத்து. இந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது உடம்பில் immunity power அதிகரிக்கும். நம் உடம்பில் செரிமானத்தை உண்டுப்படுத்துவது நார்ச்சத்து நிறைந்த உணவுகள் தான். எனவே ஆப்பிள், கொய்யா , வாழைப்பழம், கேரட் , பீட்ரூட் , சக்கரவல்லி கிழங்கு போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. B12 வைட்டமின் நம் உடம்பிற்கு தேவையான ஆக்ஸிஜனை ரத்தத்தின் மூலம் செலுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். எனவே இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Advertisment

Vegan diet- நன்மைகள்:

இந்த உணவு முறையில் சைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால், உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் சேராது. இதய நோய் அபாயத்தை குறைப்பதோடு உடல் எடையை பராமரிப்பதற்கும் இந்த உணவு முறை மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. மேலும் சிலர் சமைக்காத காய்கறிகள் மற்றும் பழங்களை அப்படியே எடுத்துக் கொள்கின்றனர். இதனால் அவற்றில் இருக்கும் முழு சத்துக்களும் அவர்களின் உடலுக்கு நேரடியாக சென்று விடுகிறது. ஆய்வாளர்கள் கூறும் பொழுது சமைக்கப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்து இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே பச்சையாக சாப்பிடும் பொழுது அது உடம்பிற்கு மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். ஆனால் சில உணவுகளை சமைத்த பின் சாப்பிடுவதே நல்லது. 

Vegan diet ஆபத்தா?

Advertisment

Vegan Diet

நாம் வீகன் டயட்டை பின்பற்றும்பொழுது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் சரியான அளவில் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த உணவு முறைக்கு நீங்கள் மாறும் முன் ஒரு ஊட்டச்சத்து நிபுணரை ஆலோசனை கேளுங்கள். எந்த பழக்கமும் நன்று விசாரித்த பிறகு உங்கள் உடம்பிற்கு அது பொருந்துமா என்று தெளிவு பெற்ற பிறகு முடிவெடுங்கள். 

சுவைக்காக அடிமையாகாமல் உணவின் தேவையையும் அதன் நன்மைகளையும் அறிந்து பின் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/benefits-of-intermittent-fasting

https://tamil.shethepeople.tv/health/tips-for-weight-gain

Advertisment

https://tamil.shethepeople.tv/health/lifestyle-changes-to-follow-after-40

https://tamil.shethepeople.tv/health/what-should-a-parent-talk-about-her-childs-vaginal-health

 

Vegan Diet
Advertisment