Advertisment

விவாகரத்தை(divorce) பற்றி சமூகத்தின் கேள்விகளும் அதற்கான பதில்களும்

விவாகரத்தான ஒரு பெண்ணிடம் இந்த சமூகம் நிறைய கேள்விகளை முன் வைக்கிறது. அந்த கேள்விகளுக்கான பதிலும், சமீபத்தில் இணையத்தில் வைரலான விவாகரத்து புகைப்படங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
divorce photoshoot tamil actress

Images are used from Shalini's Instagram Handle

தமிழ் தொலைக்காட்சி நடிகையான ஷாலினி சமீபத்தில் தனது விவாகரத்து photoshoot புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். அவர் பதிவிட்ட புகைப்படங்களுக்கு கீழ் "விவாகரத்து பெற்ற பெண் மற்ற குரல் கொடுக்க முடியாத பெண்களுக்காக கூறும் செய்தி என்னவென்றால் நஞ்சு வாய்ந்த திருமண உறவில் இருந்து வெளியே வருவது தவறில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர் மற்றும் குறைந்த ஒன்றுக்காக அடங்கிப் போக தேவையில்லை. உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் உங்களின் சிறந்த எதிர்காலத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தேவையான மாற்றங்களை உருவாக்குங்கள்.

Advertisment

மேலும், விவாகரத்து தோல்வி கிடையாது. அது உங்களுக்கு ஒரு திருப்புமுனை. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை அது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. திருமண உறவில் இருந்து வெளிவந்து உங்களுக்காக நீங்கள் நிற்பது சாதாரண ஒன்று அல்ல அதற்கு நிறைய தைரியம் வேண்டும். எல்லா தைரியமான பெண்களுக்கும் இதை நான் சமர்ப்பிக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

shalini television actress

இதனை தொடர்ந்து பலர் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர் இவருக்கு ஆதரவாகவும், பலர் அவர்களின் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

இந்திய குடும்பத்தில் விவாகரத்து என்பது பேசக்கூடாத ஒரு தலைப்பாகவே இருந்து வருகிறது. பெண்களும் காலம் காலமாக அதற்கேற்றவாறு சகித்துக் கொண்டு வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றனர். இப்படி ஒரு சமூகத்தில் வளர்ந்த பெண்கள் தங்களுக்காகவும், தங்களின் குழந்தையின் நலத்திற்காகவும் அனைத்தையும் எதிர்த்து விவாகரத்து பெருகின்றனர். ஆனால் இந்த ஒரு முடிவை எடுப்பதற்கு அவர்கள் எண்ணற்ற போராட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

பல ஆண்டு காலமாக பெண்களின் அடையாளம் அவர்களின் திருமணத்தை சுற்றியே இருக்கிறது. இப்படி ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வளர்ந்தவர்கள் பெண்கள் சுதந்திரமாக இருப்பதையும், அவர்களின் வாழ்க்கை முடிவுகளையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். பெண்கள் ஆணாதிக்க கொடுமைகளை தாங்கிக்கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்நாள் முழுவதும் கணவருடன் இருக்க வேண்டும் என்றே இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.

ஆனால், இன்று பல பெண்கள் இது போன்ற நஞ்சு வாய்ந்த உறவுகளில் இருந்து வெளியே வந்து பல சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றனர். விவாகரத்து ஒரு தோல்வி இல்லை என்றும் அது புதிதான ஒரு வாழ்வின் தொடக்கம் என்றும் பல பெண்கள் நிரூபித்துள்ளனர். பல வருட கஷ்டங்களுக்குப் பிறகு, பல துன்பங்களை அனுபவித்த பிறகு, பல அடிகளை பெற்ற பிறகு ஒரு பெண் அவளுக்காக முடிவை எடுக்கிறாள். அதை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

Advertisment

divorce paper

சமூகத்தின் கேள்விகளும் அதற்கான பதில்களும்:

சமூகம்: பெண்கள் தான் திருமண உறவில் அனுசரித்து செல்ல வேண்டும்?

Advertisment

பதில்: எந்த ஒரு உறவாக இருந்தாலும் இருவருமே அந்த உறவை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இருவரும் ஒரே உறவில் இருந்தாலும் கூட இருவரும் தனி நபர்கள் என்பதாலும், தனிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் என்பதாலும் இருவரும் ஒரு சில விஷயங்களை விட்டுக் கொடுத்து அனுசரித்து தான் செல்ல வேண்டும். எப்பொழுதும் ஒரு உறவை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒருவர் மட்டுமே அதிகமாக அனுசரித்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை தொலைத்து விட தேவையில்லை. அதற்காக அவர்களின் சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.

சமூகம்: இந்த காலத்தில் தான் இது போன்று விவாகரத்து நடக்கிறது, முன்பு எல்லாம் விவாகரத்துகள் குறைவாகவே இருந்தது.

பதில்: அந்த காலத்தில் பெண்கள் இன்று இருப்பதை விட பல மடங்கு ஆணாதிக்க சூழலில் வாழ்ந்தவர்கள். பெண்களுக்கு படிப்பறிவும், வெளி வட்டாரத்தில் பெரிதாக எந்த ஒரு பழக்க வழக்கமும் இல்லாததால் அவர்கள் சகித்துக் கொண்டு நஞ்சு வாய்ந்த திருமண உறவுகளில் இருந்தனர். ஏன், இன்றும் பலர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று பெண்கள் தங்களின் உரிமைகளை தெரிந்து கொண்டு தங்களுக்கான முடிவுகளை எடுக்கின்றனர். அந்த காலத்தில் திருமண உறவுகள் நீடித்ததால் அவை மகிழ்ச்சியாக இருந்தது என்று அர்த்தம் இல்லை. உதவி பெற இயலாத நிலையில் சகித்துக் கொண்டு நஞ்சு வாய்ந்த திருமண உறவில் தான் பலர் இருந்தார்கள்.

Advertisment

சமூகம்: விவாகரத்து பெற்றால் குழந்தையின் நிலைமை என்ன ஆகும்?

பதில்: பெற்றோர்களின் நஞ்சு வாய்ந்த திருமண உறவை பார்த்து வளரும் குழந்தைகள் மன அளவில் பாதிக்கப்படுகின்றனர். தினமும் பெற்றோர்கள் சண்டை போடுவதையும், அடித்துக் கொள்வதையும் பார்த்து வளரும் குழந்தைகளின் மன நிலையை நீங்களே யோசித்துப் பாருங்கள்? அந்த உறவில் இருப்பதைவிட பெற்றோர்கள் பிரிந்து அவர்களின் வழியில் சந்தோஷமாக இருப்பது குழந்தைக்கு நன்மையையே விளைவிக்கும்.

சமூகம்: தொலைக்காட்சி நடிகை ஷாலினியின் விவாகரத்து புகைப்படங்களை பார்த்து பலர் நல்ல வேளை அந்த ஆண் தான் தப்பித்தார். இனி அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்று பதிவிட்டு இருந்தனர்.

Advertisment

பதில்: ஒரு பெண் விவாகரத்து பெறுவது அந்த ஆண் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்பதற்காக அல்ல. அது அவளின் நிம்மதிக்காகவும், குழந்தையின் நல்ல எதிர்காலத்திற்காகவும் எடுக்கும் முடிவு ஆகும். விவாகரத்திற்கு பிறகு அந்த ஆண் மகிழ்ச்சியாக இருந்தால் அது எந்த விதத்திலும் அந்த பெண்ணை பாதிக்கப் போவதில்லை என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் பலர் இந்த சமூகம் என்ன சொல்லும் என்று பயந்து நஞ்சு வாய்ந்த திருமண உறவில் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இந்த சமூகம் சில நாட்களுக்கு தான் இதைப் பற்றி எல்லாம் பேசும். அதன் பிறகு எல்லோரும் அவர்களின் வேலையை பார்க்க சென்று விடுவார்கள். அந்த உறவில் இருக்கும் நீங்கள் தான் தினமும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பங்களை அனுபவிக்கிறீர்கள். உங்களுக்காக இந்த சமூகம் வந்து உங்கள் துணை இடம் இருந்து அடி வாங்க போவதில்லை அல்லது பிற துன்பங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்.

 

Advertisment

விவாகரத்து பெற்ற பெண்களின் வெற்றி கதைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Suggested Reading: விவாகரத்து ஆன பிறகு Project Kintsugi ஆரம்பித்த Indu

Suggested Reading: Celebrity Designer Abarna வாழ்க்கை பயணம்

Suggested Reading: மகளுக்காக நஞ்சு வாய்ந்த திருமண உறவிலிருந்து வெளியே வந்த Varnika Shukla

Suggested Reading: சாதிக்க வேண்டும் என்ற வெறி சுகிதாவின்(sugitha) வாழ்க்கையை மாற்றியது

Suggested Reading: பாலின பாகுபாட்டை உடைத்த Isaivani

divorce divorce photoshoot
Advertisment