ஒரு சராசரி மனிதர்க்கு குறைந்தது 6 முதல் 8 மணி வரை தூக்கம் அவசியம். அதை நாம் செய்தால் ஏதோ ஒரு பெரிய achievement போல் தோன்றும். ஆனால் இன்றைய ஓட்டத்தில் அதனை மணி நேரம் சாத்தியமா என்றால் தெரியாது. காலை ஒன்பது மணிக்கு வேலை தொடங்கினால் இரவு ஆறு மணி வரை அந்த laptop பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தால் தூங்காமல் அப்போது தான் mobile பார்ப்போம், படம் பார்ப்போம் . ஏனென்றால் அது தான் நமக்கான நேரம். இது ஒரு நாள் இரண்டு நாள் என்றால் சரி.. இதுவே ஒரு பழக்கம் ஆகி விட்டால்? பின்னர் உடலில் நிறைய நோய்களுக்கான godown ஆக மாறிவிடும். சரியான தூக்கத்தை பெற வழிகள் இந்த கட்டுரையில் பார்ப்போம்.
How to get better sleep
முதலில் அனைவரது பெற்றோர்களின் favourite வார்த்தை " இந்த phone laptop தூக்கி எறிவது ". அவர்கள் எதற்காக கூறுகிறார்களோ தெரியாது ஆனால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. இரவு தூங்கும் பொது இந்த மொபைல் , laptop, tv போன்றவற்றை பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதில் என்ன இருக்கிறது என்று எண்ணாதீர்கள், இது தான் மோசமான ஒன்று. அதில் வரும் radiations நமது கண்களை பாதிக்கின்றது. மேலும் நமது தூக்கத்தை கெடுகிறது. அதனால் முதல் வேலையாக இந்த electronics ஐ தூங்கும் முன் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
முன்னர் கூறிய படி ஒரு பழக்கம் நமக்கு நம் வாழ்வின் அங்கமாக மாறுவதற்கு குறைந்தது 21 நாட்கள் ஆகும். அதனால் தூக்கம் வருகிறதோ இல்லையோ இரவு 9 மணி ஆகிவிட்டால் படுக்கைக்கு சென்று விடுங்கள் காலை 6 மணிக்கு எழுங்கள். இது ஒரு பழக்கம் ஆகும் வரை கடினமாக தான் இருக்கும். நடுவில் மொபைல் பார்க்க தோன்றும். அப்போது சிறிது control செய்து உறங்குங்கள். இது நாளடைவில் ஒரு பழக்கமாக மாறி விடும்.
உறங்கும் இடம் அமைதியாகவும் இருளாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவேண்டும். அமைதியாக இருப்பதினால் நமது சிந்தனைகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் மேலும் நமக்கு மன அமைதி கொடுக்கும். அதனால எந்த ஒரு கவலையும் இன்றி தூங்குவீர்கள்.
உறங்கும் முன் வயிறு முழுக்க சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதையும் தவிர்த்துக்கொள்ளவும். இது இரண்டு முறையும் வேலை செய்யும் . நன்கு சாப்பிட்டால் நன்கு உறக்கம் வரும். மது அருந்தினால் நன்று உறக்கம் வரும் என்று. ஆனால் ஆய்வின் படி வயிறு முழுக்க சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று தெரிய வந்துள்ளது.
உடற்பயிற்சி அல்லது அதிக physical activity காலையில் இருந்தால் கண்டிப்பாக இரவு நேரத்தில் உறக்கம் வரும் என்று கூறுகிறது. அதனால் முடிந்த வரை காலையில் நடை மற்றும் உடற்பயிற்சி செய்தால் நல்லது.
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/how-to-travel-during-rain-1520949
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/society/basic-things-to-expect-from-your-partner-1520786
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/is-shapewear-too-dangerous-1520306
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/health/homemade-remedies-during-monsoon-1520186