நம் சமூகத்தில் குழந்தை பெற்ற ஒரு பெண் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் பல பொறுப்புகளை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலையையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் பொழுது பெண்கள் அவர்களை பார்த்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்கள் அவர்களை பார்த்துக் கொள்வது தேவையில்லாத விஷயம் என நினைக்கின்றனர். ஆனால் அது அவர்களது உடல் மற்றும் மனநிலையை பாதிக்கிறது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலை செய்யும் தாய்மார்களுக்கு இருக்கும் சவால்கள்:
பல வேலைகளை பார்த்துக் கொள்வது: வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பெரும்பாலும் அவர்களின் வேலையில் உள்ள விஷயங்களையும், வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்வது சவாலாக அமைகிறது.
நேரமின்மை: நேரமின்மை அவர்களை பார்த்துக் கொள்ள முடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று முயற்சிப்பதால் அவர்களால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை.
அதிகமான மன அழுத்தம்: இந்த சமூகம் பெண்கள் தான் வீட்டு வேலைகளை பார்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அனைவரையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் தற்போது வேலைக்கு செல்வதால் இரண்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தினால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
சுய பராமரிப்பு(self-care) முக்கியத்துவம்:
நல்ல உடல் ஆரோக்கியம்: தினமும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதும், ஒழுங்காக தூங்குவது போன்ற விஷயங்கள் மூலம் நமது சக்திகளை அதிகரிக்க முடியும். மேலும் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சீக்கிரமாக சோர்வடையாமல் இருக்க உதவுகிறது.
நல்ல மன ஆரோக்கியம்: தியானம், எண்ணங்களை/யோசனைகளை எழுதுவது போன்ற விஷயங்கள் மன அழுத்தம், பதட்டம் போன்ற விஷயங்களை குறைக்க உதவுவதோடு நேர்மறையான எண்ணங்களையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டு: நமது ஆரோக்கியத்தை நாம் எப்படி பார்த்து கொள்கிறோம் என்பதை நம் குழந்தைகள் பார்த்தால் அவர்களுக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அவர்களை பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்:
நேர மேலாண்மை: நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எந்த வேலைகளை முதலில் செய்ய வேண்டும் என்பதையும் முன்பே தீர்மானித்து வைக்க வேண்டும். அதில் உங்களின் சுய கவனிப்பு விஷயங்களும் இடம்பெற்று இருக்க வேண்டும்.
எல்லைகளை தீர்மானியுங்கள்: No என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுக்காக நேரத்தில் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருங்கள்.
உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது: என்ன விஷயங்கள் செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதையும், நீங்கள் நிதானமாக உணர்கிறீர்கள் என்பதையும் கண்டுபிடித்து அதை செய்யுங்கள். அது புத்தகம் படிப்பதாக இருக்கலாம், சிறிது நேரம் இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதாக இருக்கலாம், வரைவதாக இருக்கலாம் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களை அது மகிழ்ச்சி படுத்த வேண்டும்.
உதவி கேளுங்கள்: பல சமயங்களில் எல்லா வேலையும் நீங்களே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். முடிந்தவரை குடும்பத்தினர்களிடம் வீட்டு வேலைகளி பங்கேற்க சொல்லி உதவி கேளுங்கள். அதில் எந்த தவறும் கிடையாது. உதவி கேட்பதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமும் கிடையாது.
குற்ற உணர்ச்சி இல்லாமல் உங்களைப் பார்த்துக் கொள்ள ஆரம்பியுங்கள்:
அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். எல்லா விஷயத்திலும் யாராலும் சிறந்து விளங்க முடியாது என்பதை புரிந்து கொண்டு உங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இந்த சமூகம் பெண்களுக்கு என நிறைய விதிமுறைகளை வைத்திருக்கிறது. குறிப்பாக குழந்தை பெற்ற பெண்களுக்கு அது அதிகமாகவே இருக்கும். அதனால் சமூகம் என்ன நினைக்கும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் இருந்து வெளிவந்து உங்களை ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துங்கள். குற்ற உணர்ச்சி இல்லாமல் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பெண் நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே அவள் ஒரு நல்ல தாயாக, மனைவியாக, அவள் வேலை செய்யும் பெண்ணாக இருக்க முடியும். அதனால் சுய கவனிப்பு(self-care) என்பது சுயநலம் கிடையாது அது அவசியமான ஒன்றாகும்.
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content