Advertisment

விதவைகளுக்கான வாழ்க்கை முறையை இந்த சமூகம் ஏன் தீர்மானிக்கிறது?

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்ற பல விதிமுறைகளை இந்த சமூகம் வைத்திருக்கிறது. அதே போல் தான் கணவனை இழந்த பெண்ணிற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை இந்த சமூகம் அவர்கள் மேல் திணித்து வருகிறது. இது சரியா என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
widow

Image is used for representational purpose only



இந்த 21ம் நூற்றாண்டிலும் கூட விதவை என்பது பெண்களுக்கு ஒரு சாபக்கேடாக இருக்கிறது. நீண்ட தூரம் வந்தாலும், காலத்திற்கு ஏற்றது போல நம் மாறி கொண்டு இருந்தாலும், சமூகத்தில் பெண்கள் மீது சுமத்தப்படும் சமூக தீமைகளை நாம் ஒழித்தாலும், கணவனை இழந்த பெண்களை இந்த சமூகம் மனிதாபிமானமற்ற முறையில் தான் நடத்துகிறது. 

Advertisment

விதவைகள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நடைமுறையை அவர்கள் மீது திணிக்கிறார்கள். இந்த சமூக தீமைகள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால், பெண்களின் வாழ்க்கையை அது பெரிய அளவில் பாதித்துக் கொண்டு இருக்கிறது. என்னதான் நாம் பல முன்னேற்றங்களை கொண்டாலும், இறுதியில் விதவைகளை ஒதுக்கப்பட்டவர்களாக தான் உணர வைக்கிறார்கள்.

விதவை என்பது கணவனை இழந்த பெண்ணின் அடையாளமாக மாறுகிறது. பெண்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் சொந்த முடிவுகளை எடுக்கும் திறமை குறைவாக இருப்பதாக இந்த சமூகம் நினைக்கிறது. அதனால் கணவன் இறந்த உடனே அந்த பெண்ணிற்கான முடிவுகளை மற்றவர்கள் எடுக்க தொடங்கி விடுகின்றனர்.

இந்த மாதிரியான ஒரு நிகழ்வில் உறவினர்கள் அனைவரும் ஒவ்வொரு மூலையில் நின்று கொண்டு "அவள் அடுத்து என்ன செய்யப் போகிறான், தனியாக குழந்தைகளை வைத்து எப்படி சமாளிப்பாள்" என்று அவர்களுக்குள்ளேயே பேச தொடங்குகின்றனர். ஒருவர் வாழ்க்கை துணையை இழப்பது துயரத்தை தர கூடும். அவள் ஏற்கனவே பெரும் துயரத்தில் இருக்கும் பொழுது அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று ஒரு பெரிய கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டுமா? முதலில் இந்த இழப்பை அவர்கள் புரிந்து கொள்வதற்கும், அதிலிருந்து வெளிவருவதற்கும் கால அவகாசம் வேண்டும்.

Advertisment

ritual

மக்கள் ஒன்று கூடி தேவையில்லாத இரங்கல்களை தெரிவிக்கின்றனர். அவர்களின் இரங்கல்கள் அவருக்கு ஆதரவை அளிக்காமல் மேலும் அவளை கஷ்டப்படுத்துவது போலவே இருக்கிறது. குறிப்பாக துக்க சடங்குகள் அந்தந்த மக்களின் நம்பிக்கைக்கேற்ப நடத்தப்பட்டு, இனிமேல் அவள் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் போடப்படுகிறது. மேலும், இவ்வாறு செய்வது மூலமே அவள் உண்மையாக தன் கணவனை நேசிக்கிறாள் என்றும் அந்த இழப்பிற்கு அவள் துயரத்தை வெளிப்படுத்தும் விதம் என்றும் அவள் மேல் திணிக்கின்றனர். இப்படி செய்வது உண்மையில் நியாயமா?

ஒரு பெண் கணவனை இழந்த உடன் அவள் செய்யும் விஷயங்கள் வைத்து அவளின் கணவனை நினைத்து வருந்துகிறாளா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறது இந்த சமூகம். அதனால் அவள் நல்ல நிறத்தில் உடைகள் அணிவது, சிரிப்பது, நண்பர்களுடன் வெளியே செல்வது இது போன்ற விஷயங்களால் அவளை தாழ்த்தி பேசுகிறார்கள். மக்கள் அவளை பார்த்து "கணவன் இப்போதுதான் இறந்தான், அதுக்குள்ள இவன் எப்படி சந்தோஷமா இருக்கா பாரு" என்று கூறிய விமர்சிக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு கணவனை இழந்த பிறகு வாழ்க்கை இல்லையா? அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்துகிறது? 

Advertisment

பெரும்பாலான மக்கள் இதையேதான் கணவனுக்கான மரியாதை என்று அழைக்கின்றனர். இறந்த ஒருவருக்கு மரியாதை வேண்டும் என்று நினைக்கும் சமூகம் வாழ்கை துணையை இழந்த ஒரு பெண்ணிடம் மரியாதையுடன் நடந்து கொள்கிறதா? பெண்கள் அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் அவர்கள் அந்த வலி உடனே இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் நினைக்கிறது. அவள் மரணிக்கும் வரை இந்த ஆணாதிக்க விதிகளை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆங்கிலேய காலத்தில் சதி என்ற வழக்கம் ஒடுக்கப்பட்டாலும், இன்றும் கணவனை இழந்த ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற விதிகள் மாறவில்லை.

sad

இந்த 13 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அந்த 13 நாளும் அந்த பெண்ணின் வாழ்க்கைக்கான விவாத காலமாக மாறுகிறது. அவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவளை கேட்காமலேயே மற்றவர்கள் தீர்மானிக்கின்றனர். அவளுக்கு சிறிதும் கால அவகாசம் தராமல் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க சொல்கின்றனர்.

Advertisment

ஒரு பெண் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவன் யோசிப்பதற்கான நேரத்தை அவளுக்கு வழங்க வேண்டும். அவள் வேலையை தொடர்வது, மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது அல்லது மறுமணம் செய்து கொள்வது அனைத்தும் அவள் விருப்பமே. கணவனை இழந்ததால் அவள் தகுதியும், படிப்பும், திறமைகளும் காணாமல் போய்விடுவதில்லை. ஏன் பெண்களால் தனியாக வீட்டை பார்த்துக் கொள்ள முடியாது என இந்த சமூகம் நினைக்கிறது?

அவளை கண்டுபிடிப்பதற்கு நாம் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவள் மறுமணம் செய்து கொள்ளவும், மறுபடியும் காதலில் விழுவும் அவளுக்கு வாய்ப்பில்லையா? அவளுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்க பிடித்தால் அதுவும் அவள் விருப்பமே.

இந்தியாவில் மட்டும் 40 பில்லியன் கணவனை இழந்து இருக்கின்றனர் என்றும் இந்த எண்ணிக்கை கொரோனா காலகட்டத்தில் அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது. அனைவரும் கிராமத்தில் இருக்கும் பெண்கள் நிறைய சவால்களை சந்திக்கின்றனர் என்று நினைக்கிறார்கள். அதுவும் உண்மையே. ஆனால், நகரத்தில் உள்ள பெண்களும் கண்ணுக்கு தெரியாமல் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் திருமணம் அவளின் மதிப்பை குறைப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவளுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது அது எப்படி இருந்தாலும் அவள் தான் வாழப் போகிறாள்.

Advertisment

Suggested Reading: பல தடைகளைத் தாண்டி சாதித்து வருகிறார் Muthamizh

Suggested Reading: திலகவதி - முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத கைவினைப் பொருட்களை விற்று வரும் Srimathi

Suggested Reading: மக்கள் விரும்பும் கன்டென்டுகளை பதிவிடும் ஸ்ரீநிதி(style with Srinidhi)

society widow
Advertisment