/stp-tamil/media/media_files/WmDmHi5Ubv3tpoFR30Qv.png)
திருமணமும், குழந்தை பெற்றுக் கொள்வதும் தனிப்பட்ட மனிதரின் விருப்பம், அதை கட்டாயமாக்க கூடாது. சிறுவயதில் இருந்து பெரியவர்கள் மகள்களிடம் திருமணமும், தாய்மையும் தான் ஒரு பெண்ணை முழுமை அடைய செய்கிறது என்றும் அவர்களின் வாழ்க்கைக்கு அது தான் அர்த்தத்தை தருகிறது என்றும் சொல்லி வளர்க்கின்றனர். ஆனால் அது தனிப்பட்ட மனிதரின் விருப்பமாக தான் இருக்க வேண்டுமே தவிர அதை கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இந்த இரண்டையும் தவிர நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளது.
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது யார்?
பல ஆண்டுகளாக சமூகத்தில் பெண்களுக்கு ஆண்களை ஆதரிக்கவும், குழந்தைகளை பார்த்துக் கொள்வதும் தான் வேலையாக இருந்தது. இவை இரண்டும் தான் ஒரு பெண் வாழ்வதற்கான நோக்கம் என்று கருதுகின்றனர். ஆனால் தற்போது மாறி வரும் காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி பெண்கள் பல தொழில்களை செய்ய தொடங்கி விட்டனர். பல விஷயங்கள் மாறினாலும் பெண்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதும், குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவதும் இன்னும் மாறவில்லை.
ஏன் இந்த சமூகம் திருமணத்தையும், தாய்மையும் பெண்களின் மேல் திணிக்கிறது?
பெண்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பதால் தான் இந்த பிரச்சனை வருகிறது. குடும்பங்கள் அவர்களின் படிப்பு, வேலைகளுக்கு ஆதரவளித்தாலும் திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டுவிட்டு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெண்களின் வேலை என நினைக்கின்றனர். அவர்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், நல்ல வேலைக்கு சென்றாலும் கடைசியில் வீட்டு வேலை செய்ய தெரிகிறதா, இல்லையா என்பது தான் அவர்களின் மதிப்பை முடிவு செய்கிறது. இதற்கு காரணம் அவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்வது, அவர்களுக்கு வீட்டு பாடங்கள் செய்ய உதவுவது இதுவே சிறந்த தாயின் வேலை என்று நினைக்கின்றனர்.
ஒரு மனிதன் தனிப்பட்டு எடுக்க வேண்டிய முடிவு பல விமர்சனங்களுக்கு ஆளாகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இதனை அனுபவித்த ஒருவரால் சமூகத்தின் அழுத்தத்தை புரிந்து கொள்ள முடியும். சிலர் மற்றவர்களின் முடிவுகளில் கருத்துக்களை கூறுவர் ஆனால் இந்த சமூகத்தையும், அதில் உள்ள எதிர்மறையான விஷயங்களையும் யாரும் கேள்வி கேட்பதில்லை.
பெண்களுக்கு இந்த அழுத்தம் அதிகமாகவே உள்ளது. இதை செய்தால் மட்டும் தான் அவர்கள் பெண்கள் என்றும், செய்யவில்லை என்றால் அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லை என்றும் கூறுகின்றனர். எல்லா மனிதருக்கும் வெவ்வேறு கதைகள் உண்டு, வித்தியாசமான பிரச்சனைகள் உண்டு, வேறுபட்ட வாய்ப்புகளும் உண்டு. எனவே, அதை மனதில் வைத்துக் கொண்டு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். மக்கள் பெரிதாக என்ன செய்கிறார்களோ அந்த முடிவை இன்னொருவர் மேல் நாம் திணிப்பது தவறு. அதில் எந்த அர்த்தமும், பயனும் கிடையாது.
சிலர் திருமணம் செய்து கொள்ள குழந்தை பெற்றுக் கொள்ள கால அவகாசம் கேட்பது அல்லது அதை வேண்டாம் என கூறுவதற்கு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு சில காரணங்கள் இருக்கும். அனைவரின் வாழ்க்கையும் வேறுபட்டது. எனவே, அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணவது தவறு அவ்வாறு நடக்கப் போவதுமில்லை.
இந்த மாதிரி முடிவுகள் எடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்திற்கு, பணம் ரீதியாக சில பிரச்சனைகளில் அவர்கள் இருக்கலாம். முதலில் பணம் ரீதியாக நிலைக்கு வந்த பிறகு குழந்தையை பெற்றுக் கொள்ள நினைக்கலாம். அல்லது சில சமயம் உடல் நலம் காரணமாகவும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடலாம். சிலர் தற்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லாமல் இருக்கலாம். இப்படி இருப்பவர்களிடம் அவர்கள் முடிவுக்கு எதிரான விஷயங்களை திணிப்பதும், கட்டாயப்படுத்துவதும் தவறாகும். ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். மக்கள் முதலில் அதை புரிந்து கொண்டு, மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்களின் முடிவுகளை மதிக்க தொடங்க வேண்டும். திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கலாம். அது நீங்கள் எதிர்பார்ப்பதை விட பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலில் அவர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அப்படி தயாராக இல்லாதவர்கள் மேல் நீங்கள் இது போன்ற விஷயங்களை திணிப்பது மேலும் ஒரு அழுத்தமாக இருக்குமே தவிர அவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதையும் செய்யப் போவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் அவர்களின் உடலுக்கு ஏற்ப, மனதிற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க விட வேண்டும். அவர்களின் வாழ்க்கையை அவர்கள் தான் வாழ போகிறார்கள். அதனால் முடிவுகளும் அவர்கள் தான் எடுக்க வேண்டும். அவர்களின் முடிவை மற்றவர்கள் எடுத்தால் அது தலைகீழாக மாறி போகவும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, பெண்கள் திருமணம் செய்து கொள்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமே தவிர, மற்றவர்கள் அதில் எந்த ஒரு பங்கும் எடுத்துக் கொள்ளக் கூடாது.